June 22, 2018
தண்டோரா குழு
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி அண்மையில் துவங்கியது. நிகழ்ச்சி துவங்கிய 4 நாட்களில் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.
பிக்பாஸ் முதல் பாகத்தில் ஆரவ் – ஓவியா ஜோடியின் மருத்துவ முத்தம் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ஒரு புரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜனனி, ஐஸ்வர்யாவுக்கு உதட்டு முத்தம் கொடுப்பது இடம் பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது எங்கே போய் முடிய போகிறதோ தெரியவில்லை என பலரும் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.