June 23, 2018
தண்டோரா குழு
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள ஜூன் 14ஆம் தேதி தொடங்கின. 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ஜூலை 15ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில்,நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி கோஸ்டா ரிகா அணியுடன் மோதியது. இதில் பிரேசில் அணி 2-0 என வெற்றி பெற்றது. பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் 97வது 1நிமிடத்தில் கோல் போட்டு அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி ஒன்றில் வழங்கப்பட்ட போட்டி நேரத்தில் மிகத்தாமதமாக கோல் அடித்த சாதனையை நெய்மர் நிகழ்த்தியுள்ளார்.