June 25, 2018
தண்டோரா குழு
உலககோப்பை கால்பந்து லீக் போட்டியில் கொலம்பியா 3-0 என்ற கணக்கில் போலாந்தை வென்றுள்ளது.
21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன.இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொலம்பியா – போலாந்து அணிகள் விளையாடின.முதல் பாதியில் கொலம்பியாவின் எர்ரி மினா 40வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலைப் பெறச் செய்தார்.அதே சமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொலம்பியா அணியின் ரடமல் பல்கோவா 70 வது நிமிடத்திலும்,ஜுவன் குவாட்ராடோ 75 நிமிடத்தில் கோல் அடித்தனர்.இறுதியில் கொலம்பியா 3-0 என்ற கணக்கில் போலாந்தை வென்றது.
பிஃபா கால்பந்து அணி தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள போலாந்து அணியை, 16வது இடத்தில் உள்ள கொலம்பியா அணி வீழ்த்தி தனது திறமையை நிரூபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.