June 26, 2018
தண்டோரா குழு
பெண்களுக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பெண்ளுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் நவம்பர் 3ம் தேதி வெஸ்ட் இண்டீஸில் நடைப்பெறவுள்ளது.ஏ,பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில்,ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் உள்ளன.குரூப் ஏவில் வெஸ்ட் இண்டீஸ்,இங்கிலாந்து,இலங்கை,தென் ஆப்ரிக்காவும், குரூப் பியில் ஆஸ்திரேலியா,நியூசிலாந்து,பாகிஸ்தான்,இந்தியா உள்ளது.மேலும் 9வது, 10வது அணியை தேர்ந்தெடுக்கும் வகையில் தகுதிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
கடைசியாக 2016ல் நடந்த பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணியை,வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.