June 29, 2018
தண்டோரா குழு
பனாமாவுக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் துனிசியா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன.இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குரூப் – ஜி பிரிவின் கடைசி லீக் போட்டியில் துனிசியா அணி, பனாமா அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியின் முதல் பாதியில் பனாமா அணி 1-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் துனிசியா அணியின் பென் யூசுப் மற்றும் கார்ஜி அடுத்தடுத்து கோல்கள் அடித்து அசத்தினர். போட்டியின் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியா அணி வென்றது.இதன் மூலம் கடந்த 1978க்கு பின் கடைசி லீக் போட்டியில் துனிசியா அணி வெற்றியுடன் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.