June 29, 2018
தண்டோரா குழு
சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் வெளியான `கழுகு’ படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது.
கிருஷ்ணா நடிப்பில் கடந்த வருடம் 2012ம் ஆண்டு வெளியான படம் ‘கழுகு’.இப்படத்தில் கிருஷ்ணாவுடன்,பிந்து மாதவி,தம்பி ராமையா,கருணாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்,அதன் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.
ஜி.கே.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கிருஷ்ணா,பிந்து மாதவி நடிக்கின்றனர்.காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க,கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய,ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் மூணாரில் ஆரம்பமானது.