June 30, 2018
தண்டோரா குழு
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது.இதில் முதல் போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் கே.எல் ராகுல்,தினேஷ் கார்த்திக்,பும்ரா,உமேஷ் யாதவ்,சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய கோலி 9 ரன்னில் வெளியேற,ராகுலும்,ரெய்னாவும் அதிரடியாக விளையாடினர். இதையடுத்து இந்திய அணி20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி சகால்,குல்தீப் சுழலில் சுருண்டது.அயர்லாந்து அணி 12.3 ஓவரில் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இதன் மூலம் இந்திய அணி,2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை கைப்பற்றியது.