July 2, 2018
தண்டோரா குழு
பெனால்டி ஷூட்அவுட் மூலம் ஸ்பெயினை 4-3 என்ற கோல் கணக்கில் ரஷ்யா வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன.இதில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த ரஷ்யா, நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியின் 12வது நிமிடத்தில் செர்ஜியோ இக்னாஷ்விச் சேம் சைடு கோல் அடிக்க,1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் முன்னிலை பெற்றது.இதற்கு 41வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரஷ்யாவின் டிஜூபா கோலாக்கினார். இதையடுத்து ஆட்ட நேர முடிவில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.இதையடுத்து,30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.அதில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை.
இந்நிலையில் பெனால்டி ஷூட்அவுட் கொடுக்கப்பட்டது.அதில் 4-3 என்ற கணக்கில் பெனால்டி ஷூட்அவுட்டில் வென்று,ரஷ்யா முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியது.