• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செம்மரக்கட்டை விவகாரம் மேலும் 15 பேர் திருப்பதி அருகே கைது

August 11, 2016 தண்டோரா குழு

உலகிலேயே மிகவும் உறுதியான மரம் என மதிக்கப்படும் செம்மரம், திருப்பதி வனப்பகுதியில் அதிகளவில் நடவு செய்யப்பட்டு வளர்ந்து நிற்கிறது. இவற்றைச் சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தி வரும் கும்பல் அதற்காகத் தமிழகத்தில் உள்ள மலைப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களைக் குறிவைத்து அழைத்துச் செல்கிறது.

இதனால் அவர்கள் பலமுறை கைதுசெய்யப்பட்டு சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி வழியாக ரயிலில் சென்ற ஒரே குற்றத்திற்காக 32 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஆந்திர முதல்வருக்குக் கடிதம் எழுதியும் அவர் மறுத்துள்ள நிலையில், இன்று மீண்டும், திருப்பதி அருகே செம்மரம் வெட்ட வந்த திருச்சியை சேர்ந்த 9 பேர் உள்பட 15 பேரை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

திருப்பதி அடுத்த ஸ்ரீ வெங்கடேஸ்வர விலங்கியியல் பூங்கா பின்புறம் உள்ள திம்மநாயுடு பாளையம் வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்புபிரிவு எஸ்.ஐ. வாசு தலைமையில் அதிகாரிகள் இன்று காலை ரோந்து பணியில் ஈட்டுப்பட்டிருந்தனர்.

தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அதில் அவர்கள் சட்டவிரோதமாக செம்மரம் கடத்த வந்தவர்கள் எனத் தெரிந்ததை அடுத்து அனைவரையும் கைது செய்தனர்.

அவர்கள் திருச்சி மாவட்டம் வாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், அங்கமுத்து, மூர்த்தி, நாகராஜ், பெருமாள், துரையூரைச் சேர்ந்த சக்திவேல், ராமு, ரவி, திருச்சியைச் சேர்ந்த சண்முகம், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சிவா ஆகியோர் எனக் கண்டுபிடித்தனர்.

மேலும், இவர்கள் பயன்படுத்திய ஆட்டோ மற்றும் 2 இருசக்கர வாகனங்களை அவர்கள் பறிமுதல் செய்ததோடு, தப்பி ஓடிய மூவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க