• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பவானி சாகர் அணை நாளைத் திறப்பு. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

August 11, 2016 தண்டோரா குழு

ஈரோடு மாவட்ட பவானி சாகர் அணையில் இருந்து ஆயக்கட்டு நிலங்கள் பயனடையும் வகையில் நாளை முதல் தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்,

பவானி சாகர் அணையில் இருந்து ஆயக்கட்டு நிலங்களின் முதல் போகப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.

இதையடுத்து, விவசாய பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரக்கன்கோட்டை, காளிங்கராயன் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் பகுதியில் 15,743 ஏக்கர் நிலம், அரக்கன்கோட்டை பகுதியில் 24,700 ஏக்கர் நிலம் என மொத்தம் 40,247 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்

மேலும் படிக்க