July 6, 2018
தண்டோரா குழு
சென்னை நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக இயக்குநர் பாரதிராஜாவின் மகனும்,நடிகருமான மனோஜ் மீது வழக்குப் பதிவு செய்து அவரது காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் தனது பி.எம்.டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது,கார் வேகமாக சென்றதால் அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார்,தடுத்து உள்ளே இருந்த மனோஜிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையின் போது இதில் அவர் மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர். மேலும்,அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.