July 9, 2018
தண்டோரா குழு
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா,ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் தமிழ்படம் 2.ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த பாகம் ஒரு போலீஸ் அத்தியாயமாக உருவாகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதற்கிடையில்,சினிமா மட்டுமின்றி அரசியல் சார்ந்த விஷயங்களையும் கலாய்த்து இப்படக்குழு அவ்வப்போது போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது.இதனால் ரசிகர்கள் படம் எப்போது வெளியாகும் எதிர்பார்த்து இருந்தனர்.இந்நிலையில், தமிழ்ப்படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.இதையடுத்து,இப்படம் வரும் ஜூலை 12 தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.