July 12, 2018
தண்டோரா குழு
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதவுள்ளன.
21வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது.லீக்,நாக்அவுட் சுற்றுகள்,காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.இதில் முதலில் நடந்த அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் குரோஷியா அணி அபாரமாக விளையாடி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது.இதனையடுத்து வருகிற ஜூலை 15ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் விளையாடவுள்ளது.