July 13, 2018
தண்டோரா குழு
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது.இதன்மூலம் இந்திய அணிக்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 40.1 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 269 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 137 ரன்கள்,கோலி 75 ரன்கள்,தவான் 40 ரன்கள் எடுத்தனர்.இதையடுத்து,3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.