• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரியோ ஒலிம்பிக் நீச்சலில் பெல்ப்ஸை வீழ்த்திய சிங்கப்பூரின் இளம் வீரர்

August 13, 2016 தண்டோரா குழு

ரியோ ஒலிம்பிக் 100 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவு நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் மைக்கெல் பெல்ப்ஸை சிங்கப்பூரை சேர்ந்த 21 வயதான இளம் வீரர் ஜோசப் ஸ்கூலிங் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் தனி நபர்களுக்கான நீச்சல் பிரிவில் பெல்ப்ஸின் தங்க வேட்டை முடிவுற்றது. அது மட்டுமல்ல ஓய்வு குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருப்பதால் தனி நபர் நீச்சல் போட்டியில் கடைசிப் போட்டியில் வெற்றியைத் தவற விட்டிருக்கிறார் பெல்ப்ஸ்.

ரியோ ஒலிம்பிக் தொடங்கியதிலிருந்தே தனி நபர் போட்டியில் தொடர்ந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டு வந்த பெல்ப்ஸ் இந்தப் போட்டியில் மட்டும் இரண்டாம் இடம் பிடித்தது அனைவரையும் அச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜோசப் ஸ்கூலிங்கின் வயது 21 சிங்கப்பூரைச் சேர்ந்தவர். பந்தய தூரத்தை 50.39 வினாடிகளில் கடந்து இச்சாதனையைப் படைத்துள்ளார். மைக்கெல் பெல்ப்ஸ் 51.13 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார்.

ஜோசப்பின் வெற்றி குறித்து பேசிய மைக்கேல் பெல்ப்ஸ், ஜோசபின் திறமை எனக்கு கடும் சவாலாக இருந்தது. அவரது வெற்றிக்குத் தலை வணங்குகிறேன். இந்தத் தனி நபர் கடைசி போட்டி தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் முக்கியமானது. அதே வேளையில் எனக்குத் திருப்தியானதாகவே அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற ஜோசப் பேசுகையில் இது எனக்கு உணர்வுப்பூர்வமான தருணம். என்னால் இன்னும் என் வெற்றியை நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ஸ் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளோடு சேர்ந்து இதுவரை பெற்றுள்ள மொத்த தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 22 ஆகும். இத்துடன் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சேர்த்தால் அவர் பெற்ற மொத்த பதக்கங்கள் 27.

அடுத்ததாக மைக்கெல் பெல்ப்ஸ் தன்னுடைய குழுவினருடன் இணைந்து 400 மீட்டர் பட்டர் பிளைஃபிரிவு ரிலே போட்டியில் பங்கேற்கவுள்ளார். இதன் மூலம் பெல்ப்ஸ் தனது பதக்கப் பட்டியலில் தங்கத்தின் எண்ணிக்கை கூட்ட வாய்ப்புள்ளது.

ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம் மற்றும் 1 வெள்ளியுடன் மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றுள்ள 32 வயதான மைக்கெல் பெல்ப்ஸ் இந்த ஒலிம்பிக் போட்டியுடன் தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க