July 16, 2018
தண்டோரா குழு
உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.
ரஷியாவில் நடைபெற்ற 21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின.துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில்,20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ஏற்கனவே,கடந்த 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்றிருந்தது.இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரண்டாவது தடவையாக உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.