• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தவறான தகவல் தரப்பட்டதாகப் பயணி புகார்: ஐஆர்சிடிசி 7,000 இழப்பீடு வழங்க மும்பை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

August 13, 2016 தண்டோரா குழு

இந்திய ரயில்வே துறை சார்பில், பயணிகளுக்கான இணைய வழி முன்பதிவு மற்றும் பயணச் சீட்டு வினியோகம் உள்ளிட்ட பணிகளை அதன் துணை நிறுவனமான இந்தியன் ரயில்வே உணவு தயாரிப்பு மற்றும் சுற்றுலா கழகம் ஐஆர்சிடிசி மேற்கொண்டு வருகிறது.

மும்பையைச் சேர்ந்த கோபால் பங்கட்லால் ஜி பஜாஜ் என்பவர், 2013 மே 5-ம் தேதியன்று அமராவதியில் இருந்து மும்பை செல்வதற்காக, நாக்பூர் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஐஆர்சிடிசி இணைய தளம் மூலம் முன்பதிவு செய்துள்ளார்.

இணைய தளம் மூலமாகவே 300 ரூபாய் செலுத்தி, பயணச் சீட்டு பெற்றார். கைப்பேசியில் குறுஞ்செய்தி வாயிலாக, பிஎன்ஆர் எண்ணும் ஐஆர்சிடிசி இணைய தளத்தில் இருந்து பெற்றுள்ளார். பயணச் சீட்டில் குறிப்பிட்டிருந்த படி, இரவு 7.40 மணிக்கு அமராவதி ரயில் நிலையத்தில், ரயிலில் ஏறுவதற்காக பங்கட்லால் ஜி காத்திருந்தார். ஆனால், ரயில் நான்கரை மணி நேரம் தாமதமாக வரும் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

மறுநாள் குறித்த நேரத்தில் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம் காரணமாக, 180 ரூபாய்க்கு முன்பதிவில்லாத பொது பயணச் சீட்டு வாங்கி மற்றொரு ரயிலில் பயணம் செய்தார். பயணத்தில் மிகுந்த சிரமத்தையும், அசவுகர்யங்களையும் அனுபவித்துள்ளார்.

இதைக் குறித்து ஐஆர்சிடிசிக்கு புகார் அனுப்பிய போது, சம்பந்தப்பட்ட ரயில் குறித்த நேரத்தில் புறப்பட்டதாக பதில் வந்தது. பின்னர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், டெல்லியில் உள்ள ஐஆர்சிடிசி தலைமையகத்துக்கு விண்ணப்பித்து விளக்கம் கேட்டுள்ளார்.

மேலும் அன்றைய தினம் ரயில் திட்டமிட்ட நேரத்துக்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றதாக ஐஆர்சிடிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தவற்றுக்குப் பிராயச்சித்தமாக, பயணக் கட்டணமான 300 ரூபாயைத் திருப்பி அனுப்பவும் ஐஆர்சிடிசி முன் வந்தது.

ஆனால் இதில் திருப்தி அடையாத பங்கட்லால் ஜி, தனக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு, சட்ட ரீதியான செலவினங்கள் போன்ற அனைத்தையும் வழங்க உத்தர விடுமாறு மும்பை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், தவறான தகவலின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு மற்றும் அதற்கான வட்டித் தொகையைச் சேர்த்து, 7,௦௦௦ ரூபாயை பங்கட்லால் ஜிக்கு ஐஆர்சிடிசி வழங்க வேண்டுமெனத் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் படிக்க