July 18, 2018 findmytemple.com
சுவாமி:தேவி கருமாரியம்மன்.
தீர்த்தம்:வேலாயுத தீர்த்தம்.
தலவிருட்சம்:கருவேல மரம்.
தலச்சிறப்பு:இந்த தலத்தின் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டு வருகிறது.அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்து தங்கியும் செல்கின்றனர்.இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது.புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு.
ஆடி உற்சவத்தின் போது புற்றுக்கு பால் ஊற்றுதல் சிறப்பு நிகழ்ச்சியாக செய்யப்படுகின்றது. மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது.இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.கடன் தீர்த்தல்,வியாதி,வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர். பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக நம்பப்படுகிறது.
அருகிலுள்ள நகரம்:சென்னை.
கோயில் முகவரி:அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்,திருவேற்காடு – 600 077, சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.