August 15, 2016 தண்டோரா குழு
நாட்டின் 70வது சுதந்திர தினமான இன்று சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உரையாற்றினார்.
பொதுமக்களுக்குச் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து கொண்ட அவர், நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, தங்களின் உயிரை நீத்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்தார். தேசிய உரைக்குப் பின்னர் அவர் வீர தீர மற்றும் சிறப்பான நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்ப்பட்டோருக்கு விருது வழங்கிக் கவுரவித்தார்.
விருது பெற்ற நிறுவனம் மற்றும் அதிகாரிகள் விவரம் வருமாறு:
சிறந்த பொதுச்சேவைக்காக காவல்துறை கூடுதல் இயக்குனர் திரிபாதி, திருவாரூர் எஸ்.பி., மயில்வாகனன், அரவிந்த், சிலம்பரசன், விவேகானந்தன், ஸ்ரீமதி, ஜோதி, தஞ்சைச் சரக டி.ஐ.ஜி., செந்தில்குமார் , சென்னை வடக்கு மண்டலம் செந்தாமரைக்கண்ணன்,கும்பகோணம் கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட 14 காவல் துறை அதிகாரிகள்,அப்துல்கலாம் விருதைச் சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி சண்முகம் பெற்றார்.
கல்பனா சாவ்லா விருதை நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்தி.
தமிழ்நாடு அரசு விருதுகள், கலெக்டர் சுப்பிரமணியன்.
கிராமப்புற தூய்மை திட்டப்பணியில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பாஸ்கரன்.
மாற்றுத்திறனாளி, சிறந்த நிறுவனம், சிறுமலர் செவித்திறன் அமைப்பு ஜெஸிந்தா கோசல்லி.
மாற்றுத்திறனாளி நலனில் சிறந்த மருத்துவ சேவையாற்றிய டாக்டர் ராஜாகண்ணன்.
சிறந்த சமூக பணியாளர் முகம்மது ரபீ.
மாற்றுத் திறனாளி வேலைவாய்ப்பு ஜெயப்பிரகாஷ்.
மாற்றுத் திறனாளிக்கு சிறப்பு சேவை புரிந்த சேலம் மாவட்ட கூட்டுறடுவு வங்கிசிறப்பான தொண்டு நிறுவனம்: முகப்போர் புருசோத்தமன்.
சிறந்த மாநகராட்சிக்கான விருது: திண்டுக்கல் மாநகராட்சி,மேயர் மருத ராஜன்,
சிறந்த நகராட்சியாக பட்டுக்கோட்டை,ராமநாதபுரம்,பெரம்பூர்.
சிறந்த பேரூராட்சியாக பரமத்திவேலூர்,சின்னசேலம்,பெரியநாயக்கன்பாளையம்.
மாநில இளைஞர் விருது : ரூபன் சந்தோஷ்,சரவணக்குமார்,முகம்மது ரபீக்,குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாசா நசீன்,பெத்தானியாபுரம் அபர்னா.
வெள்ளம் மீட்டு மற்றும் சாலை பணிகள் சிறப்பாக பணியாற்றிய முகம்மது ரபிக், கோதை.
சிறந்த மத்திய கூட்டுறவுவங்கி; சேலம் மாவட்டம்.
மகாமகம் விழா சிறப்பு ஏற்பாடு : டாக்டர் சுப்பையனுக்கு நல்ஆளுமை விருது வழங்கி கௌரவித்தார் முதல்வர் ஜெயலலிதா.