July 18, 2018
தண்டோரா குழு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20,3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்),ஷிகர் தவான்,ராகுல்,முரளி விஜய்,புஜாரா,ரகானே,கருண் நாயர்,தினேஷ் கார்த்திக்,ரிஷப் பண்ட்,அஷ்வின்,ரவிந்திர ஜடேஜா,குல்தீப்,பாண்டியா,இஷாந்த் சர்மா,முகமது ஷமி, உமேஷ் யாதவ்,பும்ரா,ஷார்துல் தாகூர்.