July 19, 2018
தண்டோரா குழு
தல அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வேதாளம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கபீர் சிங். அதன்பின் விஜய் சேதுபதியின் ‘றெக்க’ படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், விசுவாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக கபீர் சிங் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியானது.
இந்த வதந்திக்கு கபீர் சிங் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்த கபீர் சிங்,
என் இனிய நண்பர்கள் … நான் விசுவாசம் படத்தில் நடிக்கவில்லை…நான் தற்பொழுது காஞ்சனா 4 மற்றும் நடிகர் சித்தார்த் உடன் நடிக்கிறேன் … நன்றி. அன்புடன் கபிர்.. என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.