July 21, 2018
தண்டோரா குழு
தமிழில் ஜெய்யுடன் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய சன்னி லியோன் தற்போது வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில்,சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு படமாகியுள்ளது.
கரஞ்சித் கவுர் என்ற தனது இயற்பெயரை தலைப்பாகக் கொண்டிருக்கும் இப்படத்தை இயக்குநர் ஆதித்யா தத் இயக்கியுள்ளார்.இப்படம் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.மேலும் இப்படம் வெப் சீரிஸாகவும் வெளி வருகிறது.சமீபத்தில் இப்படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியானது.
இந்நிலையில்,தற்போது நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.அதில்,”அனைவருக்கும் வணக்கம்.தமிழ் உள்படப் பல மொழிகளிலும் என் கதை சொல்லப்படுகிறது.நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்” என சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.