July 25, 2018
தண்டோரா குழு
ஆசியக்கோப்பை தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி.,) வெளியிட்டது.இதில் இந்திய அணிக்கு மட்டும் அடுத்ததடுத்த நாளில் போட்டி உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் 14 வது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 15 முதல் 26 வரை நடக்கவுள்ளது.இதில் ஐசிசி.,யின் முழுநேர உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான்,இலங்கை,வங்கதேசம்,ஆப்கானிஸ்தான் அணிகள் இத்தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றது.
தவிர,தகுதிச்சுற்றுக்கான போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம்,ஹாங் காங்,மலேசியா,நேபாளம், ஓமன்,சிங்கப்பூர் அணிகள் மோதுகின்றன.இந்நிலையில் இத்தொடருக்கான அட்டவணையை ஐசிசி., இன்று வெளியிட்டது.இதில் இந்திய அணிக்கு இடைவேளை இல்லாமல் அட்டவணை உள்ளது.
லீக் சுற்றுகள்:
செப் 15 : வங்கதேசம் – இலங்கை (துபாய்)
செப் 16 : பாகிஸ்தான் – தகுதிச்சுற்று தேர்வாளர் (துபாய்)
செப் 17 : இலங்கை ஆப்கானிஸ்தான் (அபு தாபி)
செப் 18 : இந்தியா – தகுதிச்சுற்று தேர்வாளர் (துபாய்)
செப் 19 : இந்தியா – பாகிஸ்தான் (துபாய்)
செப் 20 : வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் (அபு தாபி)