July 27, 2018
தண்டோரா குழு
எந்திரன் பட இயக்குனர் ஷங்கர் மீது தொடரப்பட்ட வழக்கில்,ஷங்கர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என்றழைக்கப்படும் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010ல் வெளியான படம் எந்திரன்.இப்படம் தமிழ் சினிமாவுக்கே புதிய அத்தியாயத்தை உருவாக்கி தந்ததையடுத்து,இதன் இரண்டாம் பாகம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என வழக்கு தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில்,தன் தரப்பு ஆதாரங்களை ஷங்கர் நீதிமன்றத்தில் சமர்பித்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும்,அவரை எதிர்தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் உத்தரவிடப்பட்டது.