July 28, 2018
tamilsamayam.com
டைமண்ட் லீக் தடகள பைனல் போட்டிக்கு இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் வரும் 30ம் தேதி டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட டைமண்ட் லீக் தடகள பைனல் போட்டிகளின்,13வது சுற்று போட்டிகள் இதுவாகும்.
இதன் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். இவரைத்தவிர்த்து,உலக சாம்பியன் ஜோஹானஸ் வெட்டர்,ஒலிம்பிக் சாம்பியன் தாமஸ் ரோஹ்லர், டைமண்ட் லீக் சாம்பியன் ஜாகப் வாடெஜ்,ஜெர்மனி சாம்பியன் ஆண்டிரஸ் ஹாப்மேன், எஸ்தோனியன் சாதனையாளர் மாக்னஸ் கிர்ட் ஆகியோரும் தங்கள் இடத்தை உறுதி செய்தனர்.எஞ்சியுள்ள 2 இடங்கள், ஃபைனல் போட்டிக்கு முன்பாக நடக்கும் தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யப்படும்.
இந்நிலையில் அடுத்த மாதம் இந்தோனேஷியாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டியிலும் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.