August 1, 2018
தண்டோரா குழு
நடிகர் தனுஷ் நடித்துள்ள வட சென்னை படத்தின் டீசர் விறுவிறுப்பையும் ஆர்வத்தையும் தூண்டக்கூடிய விதத்தில் உள்ளதாக பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தெரிவித்துள்ளார்.
பொல்லாதவன்,ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து,இயக்குநர் வெற்றிமாறன்,தனுஷ் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் வடசென்னை.சமீபத்தில் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு,வடசென்னை படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் வடசென்னை படத்தின் டீசர் குறித்து நடிகர் ஷாரூக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது நண்பரும் பன்முகத்திறமை கொண்டவருமான தனுஷின் புதிய படத்தின் டீசர் விறுவிறுப்பையும் ஆர்வத்தையும் தூண்டக்கூடிய விதத்தில் உள்ளது” என பதிவிட்டுள்ளார்.