• Download mobile app
10 Nov 2024, SundayEdition - 3196
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆதார் கார்டு மூலம் சிம்கார்டு உடனடி இணைப்பு

August 18, 2016 தண்டோரா குழு

புதிய சிம்கார்டு வாங்குவதற்கான நடைமுறைகளில் புதிய முறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.இதன்படி ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் இணையதளம் மூலமாகவே புது சிம்கார்டுக்கான ஆக்டிவேஷன் முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் புது சிம்கார்டுக்கான விண்ணப்பம் செய்வதும் சரிபார்ப்பு வேலைகளும் எளிதாகிறது. காகிதங்களும் செலவிடத் தேவையில்லா நிலை உருவாகிறது.ப்ரீ பெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் இணைப்புகள் வாங்க ஆதார் அட்டை மற்றும் கைவிரல் ரேகை இரண்டையும் சம்பந்தப்பட்ட சிம்கார்டு விற்பனையாளரிடம் கொடுத்தால் போதும்.

மத்திய அரசு இது தொடர்பாக இ-கேஒய்சி வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.இதன் மூலம் இணையதளம் மூலமான விண்ணப்பம்,அதன் நம்பகத்தன்மையை சோதிப்பது உள்ளிட்ட வேலைகள் எளிமையாகவும் வேகமாகவும் தகவல் தொடர்பு நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும்.

மேலும், இதற்கு முன் இருந்து வரும் ஆவணங்கள் அடிப்படையிலான நடைமுறையில் இருந்து இது முற்றிலும் வேறுபடுகிறது.முக்கியமாக சிம்கார்டு செயல்பாட்டுக்கான நேரம் குறைகிறது.கேஒய்சி பரிசோதனைகளும் உடனடியாக நடந்துவிடுகிறது.இ-கேஒய்சி முறையில் வாடிக்கையாளர்கள் ஆதார் எண் மற்றும் பயோ மெட்ரிக் அடிப்படையில் இணையதளம் மூலமாக சரிபார்த்துக் கொள்ள முடியும்.

மேலும், வாடிக்கையாளரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் மற்றும் டிஜிட்டல் முறையில் கைழுத்திடப்பட்ட புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை ஆதார் எண் வழங்கும் யுஐடிஏஐ மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

டிஜிட்டல் கையெழுத்து முறையிலான கேஒய்சி விவரங்களை யுஐடிஏஐ வழங்கும். புது சிம்கார்டு வழங்குவதற்காக வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை நேரடியாகக் கடைகளுக்கு அனுமதி அளிப்பதற்கான வாய்ப்புகள் சாத்தியமாகியுள்ளது என்று தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களில் கூட்டமைப்பின் தலைவர் ராஜன் மேத்திவ்ஸ், நடைமுறைகளை எளிமைப்படுத்துவது நிறுவனங்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.மேலும், சரிபார்ப்பு முறைகளுக்கான நடைமுறை பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக எல்லாப் பரிசோதனை நடைமுறைகளுக்கும் அதிகபட்சம் 8 முதல் 10 மணி நேரம் வரை ஆனது. அது தற்போது குறைந்துவிடும் என்றும் குறிப்பிட்டார்.பாரதி ஏர்டெல் நிறுவனம் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி நடைமுறையை இந்த வாரமே நடைமுறைக்குக் கொண்டு வர உள்ளதாக நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்காசிய நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான, கோபால் விட்டல் குறிப்பிட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பரிசோதனை நடைமுறைகளில் பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளதோடு அனைத்து நிறுவனங்களுக்கும் இது பயனளிக்கும் என்று வோடபோன் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க