August 8, 2018
தண்டோரா குழு
ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி கடந்த ஜூலை 27 ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை ஏற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.
இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கபட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது ஸ்டாலிடன் அஜித் ஆறுதல் கூறினார்.