August 9, 2018 findmytemple.com
சுவாமி:அண்ணாமலையார்.
அம்பாள்:உண்ணாமலையம்மன்,அபீதகுசாம்பாள்.
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்,சிவகங்கை தீர்த்தம்.
தலவிருட்சம்:மகிழ மரம்.
தலச்சிறப்பு:சைவ சமயத்தின் தலைநகர்.பஞ்சபூத தலங்களில் அக்னி தலம். நினைத்தாலே முக்தி தரும் தலம்.சித்தர்கள் பலர்,ஜோதியில் இணைந்த அற்புத தலம்.மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில்,பௌர்ணமி நேரத்தில் அண்ணாமலையாரை தரிசித்து அண்ணாமலையாரின் திருஉருவமாகவே கருதி பக்தர்கள் போற்றி வணங்கும் மலையை வணங்கி வலம் வந்தால் என்னற்ற நன்மைகளும்,வாழ்க்கையில் மேன்மையும் அடைவர் என்பது உண்மை.இதற்கு பௌர்ணமி ”கிரிவலம்” என்பர்.பகவான் ரமண மகரிஷி,யோகி ராம் சரத்குமார் மற்றும் சித்தர்கள் ஜோதியில் இணைந்த தலம்.கார்த்திகைத் திருநாளன்று மலை மீது ஏற்றப்படும் தீபஜோதியை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி அண்ணாமலையாரை தரிசிப்பர் என்பது தனி பெரும் சிறப்பு,அவ்வாறு கிரி வலம் சுற்றி வரும் போது எட்டு திசைகளிலும் எட்டு தனித்தனி லிங்கங்கள் அமைந்து உள்ளது.
அருகிலுள்ள நகரம்:திருவண்ணாமலை.
கோயில் முகவரி:அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில்,திருவண்ணாமலை – 606 601.