• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பத்து ஆண்டுகளில் பத்து பேருக்கு விற்கப்பட்ட பெண்

August 19, 2016 தண்டோரா குழு

தனது 12 வயதில்கடத்தப்பட்ட பெண் ஒருவர் 10 வருடத்தில் பத்து பேருக்கு விற்கப்பட்ட கொடுமை சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.

டெல்லி வடக்கு கிழக்கு பகுதியைச் சேர்ந்த 12 வயது பெண் ஒருவர் கடந்த 2006ம் ஆண்டு தனது சகோதரி வீட்டிற்குச் செல்லும் வழியில் இருவரால் கடத்தப்பட்டுள்ளார்.பின்னர் பல முறை குழுவாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், பல விபச்சார புரோக்கர்களால் விற்பனை செய்யப்பட்டும், காமுகன்களால் சிகிரெட்டால் சூடுவைக்கப்பட்டும் தனது வாழ்க்கையில் பல துயரங்களை அனுபவித்துள்ளார்.

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு 22 வயதான அப்பெண் அந்த கொடூரர்களிடமிருந்து தப்பித்துக் கடந்த மாதம் தனது வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். பின்னர் ஆகஸ்ட் 2ம் தேதி டெல்லி காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் போது,

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது சகோதரி வீட்டிற்குச் செல்லும் போது சிலர் என்னை மயக்க மருந்து தடவிய கைக்குட்டையால் என் முகத்தை அழுத்தியதால் மயக்கமடைந்தேன்.

அதன் பின் ஒரு விபச்சார கும்பலால் யாரோ சிலருக்கு விற்கப்பட்டேன்.பின்னர் அங்கிருந்து மேற்கு வங்கம், பஞ்சாப், குஜராத், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு விற்கப்பட்டு பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்தேன் எனத் தெரிவித்தார்.

மேலும், கடந்த பத்து வருடத்தில் பத்து நபர்களுக்குத் தான் விற்கப்பட்டதாகவும் சில காமுகர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, சிகரெட்டால் சூடும் வைத்ததாகவும் தெரிவித்த அவர், இதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தான் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அவர் கொடுத்த தகவலின்படி தற்போது, 61 மற்றும் 71 வயதான இரண்டு முதியோர் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.பலரைத் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க