August 13, 2018
தண்டோரா குழு
சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள நடிகை நஸ்ரியாவுக்கு,தொடக்கமே சிறப்பாக அமைந்தது.திருமணத்திற்கு பிறகு,நடிகை நஸ்ரியா நடிப்பில் வெளியான “கூடே” திரைப்படம் மலையாள சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.இப்படத்தில் பிரித்வி ராஜ், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதனையடுத்து மலையாள சினிமாவின் பிரபல இயக்குநர் அமல் நீரத்துடன் மூன்றாவது முறையாக நஸ்ரியாவின் கணவர் ஃபஹத் பாசில் இணைந்துள்ளார்.`வரதன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நஸ்ரியா தான் தயாரிக்கிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள நஸ்ரியா,தன் கணவருக்காக பாடகியாகவும் மாறியுள்ளார்.சுசின் ஷியாம் இசையில் உருவாகியுள்ள ‘புதியொரு பாதையில்’ எனத் தொடங்கும் பாடலை நஸ்ரியா இப்படத்தில் பாடியுள்ளார்.இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது யூ டியூபில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.