• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அப்பாவைப் பார்க்க 450 கிலோமீட்டர் சைக்கிளில் சென்ற சிறுவன்

August 20, 2016 தண்டோரா குழு

அம்மா திட்டியதால் அப்பாவைப் பார்க்க 450 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் செய்த 12 வயது மாணவன் தற்போது பிரபலமாகியுள்ளான்.

இந்தியாவில் உள்ள வட மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தின் சதார்பூர் கிராமத்தில் ரிதேஷ்(12) என்ற சிறுவன் தன் அம்மாவுடன் வசித்து வந்துள்ளான்.

இவன் அங்கு உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். இவனது அம்மா கிராமத்துக்கு வெளியில் லாண்டரி கடை வைத்துள்ளார்.கடந்த 2ம் தேதி அம்மாவைப் பார்க்க ரிதேஷ் கடைக்கு சென்று போது, அம்மாவிற்கு மதிய உணவை கொண்டு செல்ல மறந்து விட்டான்.

அதனால் கோபமடைந்த அவனுடைய தாயார் ரிதேஷை திட்டியுள்ளார். மேலும், வீட்டுக்குச் சென்று உணவு கொண்டு வரும்படி கூறியுள்ளார்.இதையடுத்து அம்மா மீது கோபத்தில் இருந்த ரிதேஷ், வீட்டுக்குச் செல்லாமல் அம்மா திட்டியதைப் பற்றி அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தனது சைக்கிளில் லக்னோவை நோக்கி ஓட்ட ஆரம்பித்துள்ளான்.

இதனிடையே வீடு திரும்பிய அவனது தாயார் இரவு நேரமாகியும் ரிதேஷ் வீட்டுக்கு வராததால், பயந்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.இதையடுத்து காவல்துறையினர் கடத்தல் வழக்குப் பதிவு செய்து மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு ரிதேஷின் படத்தை அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து தகவலறிந்த ரிதேஷ்யின் தந்தை மறுநாளே லக்னோவின் சதார்பூர் கிராமத்துக்கு வந்துவிட்டார்.இந்நிலையில் சதார்பூர் கிராமத்தில் இருந்து புறப்பட்ட சிறுவன் தொடர்ந்து 4 நாட்கள் சைக்கிளிலேயே லக்னோ நோக்கிச் சென்றுள்ளான்.

கையில் இருந்த குறைந்த பணத்தில் ஆங்காங்கே உணவு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, இரவில் சாலையோரம் உள்ள கடைகளுக்கு வெளியில் தூங்கியுள்ளான்.

சர்தார்பூர் கிராமத்தில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லட்சுமிபூர் கெரி என்னும் இடத்தை ஆகஸ்ட் 6ம் தேதி அடைந்துள்ளான்.அங்குச் சென்ற போது சைக்கிள் டயர் பஞ்சர் ஆகிவிட்டது.கையில் இருந்த பணம் செலவாகி விட்டதாலும், லட்சுமிபூர் கெரியில் இருந்து லக்னோ இன்னும் 150 கிலோ மீட்டர் தூரம் உள்ளதாலும் செய்வதறியாது திகைத்துள்ளான்.

ஆனாலும் அப்பாவை எப்படியும் பார்த்து அம்மா திட்டியதை கூறிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ரிதேஷ், வழியில் போவோர் வருவோரிடம் சாப்பிடுவதற்கும் பஞ்சர் போடுவதற்கும் பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளான்.

இதனால் அவன் மீது சந்தேகப்பட்ட ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.இதையடுத்து ரிதேஷை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில்,அவன் கூறியதைக் கேட்ட காவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் இது குறித்து உடனடியாக நொய்டா காவல்துறையினருக்குத் தெரிவித்துள்ளனர்.இது குறித்து லட்சுமிபூர் காவல்துறையினர் கூறும் போது,மழையில் நனைந்து கொண்டே சைக்கிள் ஓட்டியுள்ளான்.அம்மா திட்டியதால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தான்.

சுமார் 12 வயது சிறுவனால் செய்ய முடியாத ஒரு விஷயமான 450 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணத்தை ரிதேஷ் செய்துள்ளான் எனத் தெரிவித்துள்ளனர்.சராசரியாக ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் தூரம் சைக்கிளை ஓட்டியுள்ளான் எனவும் தெரிவித்துள்ளனர்.

சைக்கிள் பஞ்சர் ஆகாமல் இருந்திருந்தால் நான் லக்னோவை சென்றடைந்திருப்பேன் என்று போலீஸாரிடம் ரிதேஷ் கூறியுள்ளான்.இதையடுத்து மறுபடியும் இது போல் வீட்டை விட்டு வரக்கூடாது என ரிதேஷுக்கு அறிவுரை கூறி, மறுநாள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

அம்மா திட்டினார் என்பதற்காக நாள் ஒன்றிக்கு நூறு கிலோமீட்டர் என 450 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஒட்டிய 12 வயது சிறுவனை அவன் செய்த தவற்றைப் பார்க்காமல் அவனது மன வலிமை மற்றும் உடல் வலிமையைப் பார்த்து முறையாகப் பயிற்சி வழங்கினால் ஒருவேளை அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெற வாய்ப்பிருக்குமோ என நினைக்க வேண்டும் என்பதே தற்போது அனைவரது எண்ணமாகவும் உள்ளது.

மேலும் படிக்க