• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நேர்மையான ஊழியருக்குப் பதவி உயர்வு வழங்கிய ஏர் இந்தியா

August 20, 2016 தண்டோரா குழு

ஏர் இந்தியா நிறுவனம் தனது நேர்மையான பணியாளரை கவுரவப்படுத்தி அவருக்குப் பதவி உயர்வு வழங்கியுள்ளது.பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா தனது பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதல் முறையாக இந்த விருதை வழங்கியுள்ளது.

ஏர் இந்தியாவின் விமான பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த சுபாஷ் சந்தர் என்கிற பாதுகாப்பு அதிகாரி தற்போது பதவி உயர்வுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.இவர் அந்த நிறுவனத்தில் சுமார் 29 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.முன்னுதாரணமான நடத்தையாளர் என்கிற விருதும் அவருக்கு வழங்கப்பட்டது என்று அந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஸ்வனி லொகானி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது பாதுகாப்புத் துறையின் செயல் இயக்குநர் அலோக் சிங் ஐபிஎஸ், இந்த விருதைப் பாதுகாப்பு அதிகாரி சந்தருக்கு வழங்கினார் என்று ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

அறிவியல் பட்டம் பெற்றுள்ள சந்தர் விமான போக்குவரத்து துறை பாதுகாப்பு சார்ந்து உயர் கல்வி முடித்தவர்.விமானங்களில் பயணிகள் தங்கள் கவனக்குறைவால் தவறவிடும் பணம் உள்ளிட்ட பல மதிப்பு உள்ள பொருட்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் உரியவர்களிடம் சேர்த்துள்ளார் என்று ஏர் இந்தியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக,கடந்த ஜூன் மாதத்தில் ஹாங்காங்கிலிருந்து வந்த விமானத்தைச் சோதனையிடும் போது 5 லட்சத்துக்கு அதிகமான வெளிநாட்டு பணம் இருந்த பையை கண்டுபிடித்துள்ளார் என்றும் அந்த பணத்தை அவர் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் என்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க