August 20, 2016
தண்டோரா குழு
திருத்தணியில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மர்மக்காயச்சல் பரவி வந்தது.இந்தக் காய்ச்சலில் அதிகமாகக் குழந்தைகள் தான் பாதிக்கப்பட்டனர்.இது குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரவிய இடங்களில் சோதனை செய்தனர்.
அந்தச் சோதனையில் பரவி வருவது வைரஸ் காய்ச்சல் எனக் கண்டறியப்பட்டது. ஆனால் அதற்குள் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.மேலும் பலர் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மேலும் இரண்டு சிறுவர்கள் இன்று உயிரிழந்துள்ளனர்.ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.இதனால் இப்பகுதியில் சுகாதாரத்துறையினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் சிறுவர்கள் பலியாகாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது.