August 14, 2018
தண்டோரா குழு
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ்2 வில் போட்டியாளர்கள் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டு தான் வருகிறார்கள்.அந்த வகையில் மஹத் இதுவரை மும்தாஜூடன் பல முறை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.பாலாஜியை மரியாதை இல்லாமல் திட்டியுள்ளார்.
இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில்,பிக்பாஸ் போட்டியாளர்களை இரண்டு அணியாக பிரித்து டாஸ்க் ஒன்று கொடுத்துள்ளார். அந்த டாஸ்கில் மகத் ஒரு அணியிலும்,டேனியல் ஒரு அணியிலும் உள்ளனர்.அப்போது மகத் டாஸ்கில் ஒழுங்காக நடந்து கொள்ளாமல் அத்துமீறி நடந்து கொள்கிறார்.இதனால் கோபமடைந்த டேனியல், இது குறித்து மகத்திடம் பேசுகிறார். அப்போது மகத் டேனியலை தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.