August 15, 2018
tamilsamayam.com
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ரிஷப் பண்ட்,பும்ரா ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி,3 டி-20,3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது.ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) கைப்பற்றியது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.இதில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.இதன் மூலம் கேப்டனாக கோலி படு மோசமான தோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில் கேப்டன் கோலி,பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் அதிகாரத்துக்கு ஆப்பு வைக்க பிசிசிஐ., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இதையடுத்து கோலியின் பிசிசிஐ.,யின் உத்தரவின் பேரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் என தெரிகிறது.
சர்வதேச அனுபவ அடிப்படையில் வாய்ப்பு கிடைத்த போதும்,அதை தினேஷ் கார்த்திக் சரியாக பயன்படுத்தவில்லை.இதனால் இவருக்கு பதிலாக இளம் பண்ட் அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.அதே போல,இளம் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால்,அவரும் மீண்டும் அணிக்கு திரும்பலாம் என தெரிகிறது.இதை உறுதி செய்யும் விதத்தில் இவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.