August 16, 2018
tamilsamayam.com
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள்,அங்கு தேசிய கொடியேற்றி,சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி
(2-1) கைப்பற்றியது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.இதில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் கேப்டனாக கோலி படு மோசமான தோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில் கேப்டன் கோலி,பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் அதிகாரத்துக்கு ஆப்பு வைக்க பிசிசிஐ., திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் நேற்று இந்தியா தனது 72 வது சுதந்திர தினத்தை கொண்டாடியது.இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் உள்ள கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே மூவர்ணக்கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.