August 20, 2016
தண்டோரா குழு
ஜப்பான் நாட்டின் மியாகோ நகரை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும், ஆனால் உயிர்பலியோ அல்லது சேதமோ எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மியாகோ நகரில் இருந்து 167 கி.மீ தூரத்தில் கடலில் நிலநடுக்கம் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6ஆகப் பதிவாகியுள்ளது எனவும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.