August 18, 2018
தண்டோரா குழு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.100ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால்,பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர்.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.மீட்பு படையனர் தொடர்ந்து மக்களை மீட்டு வருகின்றனர்.
இதற்கிடையில்,கேரள மக்களுக்காக பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலகினர் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில்,இயக்குனர் ஷங்கர் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய் (10 லட்சம்) நிதி உதவியை (ஆன்லைன் RTGS மூலம்)வழங்கியுள்ளார்.