August 20, 2018 findmytemple.com
சுவாமி:அருள்மிகு நவநிதேஸ்வரர்(சிங்கராவேலர்)
மூர்த்தி:சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி)
தீர்த்தம்:ஷீரா புஷ்கரிணி எனும் பாற்குளம்
தலவிருட்சம்:மல்லிகை
தலச்சிறப்பு:இத்தலத்திற்கு வரும் உலக பக்தர்களின் சிக்கல்களை தீர்த்து வைக்கும் தெய்வமாக உள்ளதால் இத்தலத்திற்கு சிக்கல் என பெயர் கொண்டது என கூறுகின்றனர்.இங்கே தான் சூரபத்மனை வதம் செய்வதற்காக வந்த சிங்காரவேலனுக்கு அன்னை வேல் கொடுத்து ஆசிகள் வழங்குகிறாள்.ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சஷ்டித் திருவிழா நடைபெறும்போது வேல்வாங்கும் விழாவில் தாயிடம் வேல் வாங்கிக் கொண்டு முருகப் பெருமான் தன் கோயிலுக்கு வந்து அமர்ந்த பின்னால்,வேலின் வீரியம் தாங்காமல் சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய்ப் பெருகும் காட்சி இன்றளவும் நடைபெறுகிறது.பட்டுத் துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை பெருக்கெடுக்கும் என்று சொல்கின்றார்கள்.சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்ற வழக்குச் சொல்லும் இருக்கிறது.
நடைதிறப்பு:காலை 5.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை,மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை
பூஜைவிவரம்:ஆறுகால பூஜைகள்
திருவிழாக்கள்:கந்தசஷ்டி – சிறப்பு,சித்திரை பிரம்மோற்சவம்,மாதாந்திர கார்த்திகை வழிபாடு சிறப்பு தரும்.
அருகிலுள்ள நகரம்:நாகப்பட்டினம்
கோயில் முகவரி : அருள்மிகு நவநிதேஸ்வரர் திருக்கோவில்,சிக்கல் அஞ்சல்-611108. நாகை மாவட்டம்.