• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரள மக்களின் நிவாரணத்திற்காக லைக்கா நிறுவனம் ₹1 கோடி ரூபாய் நிதியுதவி

August 23, 2018 தண்டோரா குழு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்தவாரம் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 பேருக்கு மேலாக உயிரிழந்துள்ளனர்.

பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன.தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர். இதனால் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்குபல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கான கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அந்நிறுவனத்தின் பொது மேலாளர் நிஷாந்தன் நிருபன் வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க