• Download mobile app
05 Feb 2025, WednesdayEdition - 3283
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டூர் ஆணை நீர் வரத்து அதிகரிப்பு, நம்பிக்கையில் டெல்டா விவசாயிகள்

August 22, 2016 தண்டோரா குழு

கடந்த சில நாட்களாகவே மேட்டூர் அணையின் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவது டெல்டா பகுதி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு ஜனவரி மாதம் வரை நீர் கொடுப்பது வழக்கம்.நீர் இருப்பைப் பொருத்தும் விவசாயிகளின் கோரிக்கையைப் பொருத்தும் நீர் திறப்பு நாட்கள் அதிகப்படுத்தப்படும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடகாவில் இருந்து வரும் நீரின் அளவு குறைந்ததை அடுத்து ஜூன் 12ம் தேதி நீர் திறக்கப்படவில்லை.இதனால் டெல்டா பகுதி விவசாயிகளின் குறுவை சாகுபடி என்பது கனவாகவே உள்ளது.இந்நிலையில் இந்தாண்டு இதுவரை நீர்வரத்து குறைவாகவே இருந்ததால் டெல்டாவிற்கு நீர் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் சுமார் 3,000 கன அடியாகவே நீடித்து வந்த நீர்வரத்து தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு சுமார் 8,000 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.

அணையில் இருந்து குடிநீருக்காக 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத்துவங்கியுள்ளது.நேற்று காலை நிலவரப்படி 65.48 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 66.26 அடியாக உயர்ந்துள்ளது.

இந்த நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் அணையின் நீர் மட்டம் உயர்ந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் என விவசாயிகள் நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க