August 24, 2018
தண்டோரா குழு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த போட்டி தொடரில் ஆண்களுக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – திவிஜ் ஷரன் ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தான் ஜோடியை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளது.
மேலும்,ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 6 தங்கம்,4 வெள்ளி,13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.