August 22, 2016 தண்டோரா குழு
ரஜினியின் கபாலிடா ஸ்டைலில் பொண்டாட்டிடா என டப்ஸ்மாஸ் செய்து வீடியோவை வெளியிட்ட பெண்ணை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “கபாலி” திரைப்படம் உலகெங்கும் வெளியாகி வெற்றிப்படமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இப்படத்தின் டீசர் முதல் படம் வெளியாவது வரை ரஜினி ஒவ்வொரு வசனமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கம் போல் தனது பஞ்ச் வசனத்தில் “கபாலிடா” என்று பேசியுள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும்,பெண் ஒருவர் கபாலி ஸ்டைலில் பொண்டாட்டிடா என்று டப்ஸ்மாஸ் செய்து அதனைச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.இது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு,மிகவும் பிரபலமானது.
இந்நிலையில் இந்த வீடியோவில் நடித்த பெண்ணை நேரில் வருமாறு நடிகர் ரஜினிகாந்த் அழைத்துள்ளார்.இதனால் மகிழ்ச்சியடைந்த அந்தப் பெண், ரஜினிகாந்தை தனுஷின் இல்லத்தில் சந்தித்துள்ளார்.அப்பெண்ணின் செயலை ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் அப்பெண் ரஜினியுடன் செல்பி எடுத்துள்ளார்.தற்போது, இப்புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்டாகி வருகிறது.