August 27, 2018
தண்டோரா குழு
பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மஹத் வெளியேற்றப்பட்டார் இதற்கிடையில்,கடந்த வாரம் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்தவர் நடிகை விஜயலட்சுமி.எனினும் இன்னும் இவருடன் போட்டியாளர்கள் சகஜமாக பழகவில்லை.
இந்நிலையில்,இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோவை பிக்பாஸ் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.அதில்,முதல் புரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏதோ கடிதத்தை படித்து கண்ணீர் விட்டு அழுகின்றனர்.இரண்டாவது ப்ரோமோவில்,மும்தாஜுக்கு தோசை சுட்டுக்கொடுக்கும் போது விஜயலட்சுமியை பக்கத்தில் இருக்க சொல்கிறார் சென்றாயன்.இதற்கு விஜயலட்சுமி நான் அசிஸ்டெண்ட் இல்லை போட்டியாளர் என்று கூறுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.