August 27, 2018
தண்டோரா குழு
ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா நேவால்,பிவி சிந்து இருவரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனர்.முதல் அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
இதையடுத்து நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிவி சிந்து,ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.நாளை நடக்கவுள்ள இறுதிபோட்டியில் பிவி சிந்து,சீன வீராங்கனை தாய் டி சுயிங்கை எதிர்த்து விளையாடவுள்ளார்.