August 27, 2018
தண்டோரா குழு
சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் நந்த கோபாலன் குமரன் என்ற கதாபாத்திரத்தில் சமூக ஆர்வலராக சூர்யா நடித்து வருகிறார்.இந்நிலையில் இப்படப்பிடிப்பு நடக்கும் இடத்தை குறிப்பிட்டு இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் பதிவிட்டார்.
இதையடுத்து சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்துக்கு ரசிகர்கள் குவிந்தனர்.அப்போது கேரவனில் இருந்து வெளியே வந்த சூர்யாவை சூழ்ந்துக்கொண்டனர்.அந்தக் கூட்டத்தில் சிக்கிய சூர்யா வெளியே வர கஷ்டப்பட்டுள்ளார்.இதனால் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு விட்டதாம்.