August 27, 2018
தண்டோரா குழு
பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல பெயருடன் இருந்த மகத் கடந்த சில நாட்கள் செய்த செயலால் தன் பெயரை இழந்தார்.இதையடுத்து,நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மகத்,நேராக சிம்புவை சந்தித்தார்.
இரண்டு மாதங்களுக்கு பின்னர் உயிர் நண்பரை சந்தித்த சிம்பு,மகத்தின் கன்னத்தில் பளார் பளாரென செல்லமாக அறைந்தார்.இந்த அடியெல்லாம் உனக்கு வலிக்காது,நீதான் ஏற்கனவே நிறைய அடி வாங்கிட்டியே என்று சிம்பு கூறியுள்ளார்.இதுதான் சிம்பு,என் உயிர் நண்பன் சிம்பு என்று மகத் தன்னுடைய டுவிட்டரில் இதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.