August 29, 2018
தண்டோரா குழு
இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா நாளை களம் இறங்குகிறது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா,3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கறது.
இந்நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது.3-வது டெஸ்ட்டை போலவே இந்த டெஸ்டிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்ததுக் கொண்டிருக்கின்றனர்.