August 31, 2018
தண்டோரா குழு
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று தொடங்கியது.இப்போட்டியில்,டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இப்போட்டியில் இந்தியா தரப்பில் 3-வது டெஸ்டில் விளையாடிய அதே அணியே விளையாடியது.இங்கிலாந்து அணி தரப்பில் காயம் காரணமாக வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் பதிலாக இளம் வீரர் சாம் குர்ரன் மற்றும் மொயின் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது.அதன்பின் மொய்ன் அலி,சாம் குர்ரன் ஜோடி சரிவில் இருந்து மீட்டது. சாம்குர்ரன் 78 ரன்னும்,மொய்ன்அலி 40 ரன்னும் எடுத்தனர்.இறுதியில் இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும்,இஷாந்த்சர்மா,முகமது சமி,அஸ்வின் தலா 2 விக்கெட்டும்,பாண்ட்யா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய இந்தியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது.ஷிகா தவான் 3 ரன்னுடனும்,லோகேஷ் ராகுல் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
மேலும்,நேற்றைய டெஸ்ட் போட்டிகளில் 2 விக்கெட்கள் எடுத்தது மூலம் 250 விக்கெட்டுக்களை வீழ்த்திய 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை இஷாந்த் சர்மா படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.